செய்திகள்

ஒரிஜினல் லைலெசன்சு தொடர்பான உத்தரவை திரும்ப பெறாவிட்டால் போராட்டம்: லாரி உரிமையாளர்கள்

ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற அரசு உத்தரவை வருகிற 14-ந்தேதிக்குள் திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் அறிவித்துள்ளார்.

சேலம்:

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் குமாரசாமி இன்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

லாரி டிரைவர்கள், லாரி உரிமையாளர்கள் ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரி முதல் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம்.

தற்போது டிரைவர்கள் அனைவரும் அசல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற அரசு உத்தரவை வருகிற 14-ந்தேதிக்குள் திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்துவோம்.

அசல் லைசென்ஸ் மற்றும் அசல் ஆவணங்கள் வாகன உரிமையாளரிடம் இருந்தால் எந்த பிரச்சினை ஏற்படாது.

மாறாக வாகனங்களில் அதனை வைத்திருந்தால், திருட்டு போனால் பல சலுகைகளை பெற முடியாது. அசல் சான்றிதழ் மற்றும் அசல் லைசென்ஸ் இல்லாவிட்டால் விபத்து ஏற்படும்போது டிரைவர்கள் அல்லது வாகன உரிமையாளர்கள் விபத்து காப்பீடு திட்டம் பெறுவதற்கு மிகவும் சிரமம்.

வாகன சோதனைகள் முறையாக நடக்கவில்லை. இந்த உத்தரவால் போலீசார் சிலர் லஞ்சம் பெறுவதற்கு உதவியாக இருக்கும். எங்களது நியமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT