எனது திட்டத்தை அறிந்திருந்தால் டெல்லி சந்திப்பின்போது ஏன் பேசவில்லை? ராகுல் கருத்துக்கு நிதிஷ் பதில்
கூட்டணியில் இருந்து நான் விலகப்போவதை முன்கூட்டியே ராகுல் அறிந்திருந்தால், டெல்லியில் அவரை சந்தித்தபோது ஏன் அதுபற்றி பேசவில்லை? என நிதிஷ் குமார் கேள்வி எழுப்பினார்.
மாலை மலர்
பீகார் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த மெகா கூட்டணியில் இருந்து விலகிய முதல் மந்திரி நிதிஷ் குமார், பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார். சட்டமன்றத்தில் மெஜாரிட்டியையும் நிரூபித்துவிட்டார்.