கொலை 
செய்திகள்

இடுக்கி அருகே முதியவர் வெட்டிக்கொலை

இடுக்கி அருகே முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மூணாறு:

இடுக்கி மாவட்டம் உப்புத்துறை கந்தலூர் பகுதியை சேர்ந்தவர் பீட்டர்(வயது 70). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பினு(42) என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது பினு தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் பீட்டரை வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த பீட்டரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பீட்டர் பரிதாபமாக இறந்து விட்டார். இதுதொடர்பாக உப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பினுவை கைது செய்தனர்.