விபத்து பலி 
செய்திகள்

இடுக்கி அருகே கார் மோதி மூதாட்டி பலி

இடுக்கி அருகே கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இடுக்கி:

இடுக்கி மாவட்டம் வண்டன்மேடு ராஜாகண்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கம்மாள் (வயது 69). இவர் நேற்று முன்தினம் அங்குள்ள புற்றடி-சேற்றுக்குழி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, தங்கம்மாள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து வண்டன்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT