இதயவர்மன் எம்.எல்.ஏ. 
செய்திகள்

ஒருநாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் ஜெயிலில் அடைப்பு

தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மனின் ஒருநாள் போலீஸ் காவல் முடிந்துள்ள நிலையில், மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாலை மலர்

நிலத்தகராறு மோதலில் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

நேற்று இதயவர்மனை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

உடனடியாக அவரை காவலில் எடுத்து போலீசார் விசாணை நடத்தினர். விசாரணை முடிந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மீண்டும் இதயவர்மனை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து எம்எல்ஏ இதயவர்மன் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.