துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறை வருகிற 28-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கிரிக்கெட்டின் புதிய விதிப்படி மைதானத்தில் வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் நடுவரால் வெளியேற்றப்படுவார்கள்.
டெஸ்ட் போட்டியில் 80 ஓவருக்கு பிறகு டி.ஆர்.எஸ். முறைக்கு இனி அனுமதி கிடையாது. 20 ஓவர் போட்டிகளில் நடுவரின் முன்பு மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல ரன் அவுட் கேட்ச் மற்றும் பேட்டின் எடை ஆகியவற்றிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.