செய்திகள்

50 ஓவர் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து நடத்துகிறது

ஐசிசி நடத்தும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் 2021-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி முதல் பிப்ரவரி 20-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

ஐசிசி ஆண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களை நடத்துவதுபோல் மகளிர்களுக்கான உலகக்கோப்பை தொடர்களையும் நடத்தி வருகிறது. தற்போது இங்கிலாந்தில் ஆண்களுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

2021-ம் ஆண்டு 50 ஓவர் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் ஜனவரி மாதம் 30-ந்தேதி முதல் பிப்ரவரி 20-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து 1992 மற்றும் 2015-ல் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து ஆண்களுக்கான உலகக்கோப்பையை நடத்தியுள்ளது. 2000-ம் ஆண்டில் பெண்களுக்கான உலகக்கோப்பையை நடத்தியுள்ளது.