செய்திகள்

இந்தியா முதல் இடத்தில் நீடிப்பு: தென்ஆப்பிரிக்காவை 3-1 என வீழ்த்திய இங்கிலாந்து 3-வது இடம்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் நீடிக்கிறது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை வென்ற இங்கிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மாலை மலர்

காலே மற்றும் கொழும்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி 2-0 என முன்னிலையில் இருக்கிறது.

இந்நிலையில் டெஸ்ட் அணிகளுக்கான ஐ.சி.சி. தரவரிசை நேற்றைய போட்டிகள் முடிவின் அடிப்படையில் வெளியிடப்பட்டது.

இதில் இந்தியா 123 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. பல்லேகலேயில் நடைபெற இருக்கும் 3-வது போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் ஒரேயொரு புள்ளியைத்தான் இழக்கும். இதனால் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பு கிடையாது. அதேவேளையில் போட்டியில் வெற்றி பெற்று 3-0 எனத் தொடரைக் கைப்பற்றினால் 2 புள்ளிகள் அதிகரித்து 125 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும்.

இங்கிலாந்தாக்கு எதிராக தொடரை 1-3 என இழந்த தென்ஆப்பிரிக்கா 7 புள்ளிகளை இழந்தது 110 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது.