செய்திகள்

இரட்டை சதத்தால் பேட்ஸ்மேன் தரவரிசையில் 8-வது இடத்திற்கு முன்னேறினார் குக்

இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக் டபுள் செஞ்சூரி அடித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #ICCTestrankings

மாலை மலர்

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க பேட்ஸ்மேனும் ஆன அலஸ்டைர் குக் அவுட்டாகாமல் 244 ரன்கள் குவித்தார். இதன்மூலம் 17-வது இடத்தில் இருந்த அவர் 9 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதல் இடத்திலும், விராட் கோலி, புஜாரா, கேன் வில்லியம்ஸ் ஆகியோர் முறையே 2-வது இடம் முதல் 4-வது இடத்தை பிடித்துள்ளனர். ஜோ ரூட் ஒரு இடங்கள் முன்னேறி கேன் வில்லியம்சன் உடன் 4-வது இடத்தை பகி்ர்ந்துள்ளார்.

டேவிட் வார்னர் 6-வது இடத்திலும், ஹசிம் அம்லா 7-வது இடத்திலும் உள்ள நிலையில், பாகிஸ்தான் வீரர் அசார் அலி 9-வது இடத்திலும், இலங்கை வீரர் தினேஷ் சண்டிமல் 10-வது இடத்திலும் உள்ளனர்.