ராஜஸ்தான், குஜராத் என பல மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வந்த ஆசாராம் பாபு சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இன்று குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து, பத்திரிக்கையாளர் ப்ரதிக் சின்ஹா என்பவர், பிரதமர் மோடியுடன் ஆசாராம் பாபு இருக்கும் பழைய வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) ட்விட்டர் பக்கத்தில் பிரதிக் சின்ஹாவின் பதிவு ‘நாராயன் நாராயன்’ என்ற தலைப்புடன் பகிரப்பட்டிருந்தது. இதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதற்கு பலரும் கிண்டலாக பதில்களையும் அளித்தனர்.