செய்திகள்

விக்கெட் வீ்ழ்த்தியதை ஆக்ரோஷமாக கொண்டாடிய இஷாந்த் ஷர்மாவிற்கு 15 சதவிகிதம் அபராதம்

இங்கிலாந்து வீரர் தாவித் மலனை வீழ்த்தியதை ஆக்ரோஷமாக கொண்டாடிய இஷாந்த் ஷர்மாவிற்கு 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #ENGvIND

மாலை மலர்

13 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னி்ங்சை தொடங்கியது. இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் தாவித் மலன் ஜோடி சேர்ந்து விளையாடினார்.

இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. இங்கிலாந்து 70 ரன்கள் எடுத்திருக்கும்போது தாவித் மலன் 20 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். விக்கெட் வீழ்த்திய சந்தோசத்தில் ஆக்ரோஷமாக தாவித் மலன் அருகில் சென்று சைகை காட்டினார்.