ஐசிசி-யின் இந்த விதிமுறையை அனைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த விதிமுறையால் தொடர்ச்சியாக இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணிக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போனது.
கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை வாழ்த்துவதை விட நியூசிலாந்து அணிக்கு ஆறுதல் கூறுபவர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இறுதிப் போட்டியில் யாரும் தோற்கவில்லை. வெற்றியாளருக்கு மகுடம் சூட்டப்பட்டது என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘போட்டியின் இறுதியில் எங்களை பிரித்துப் பார்க்க ஏதுமில்லை. இறுதிப் போட்டியில் யாரும் தோற்கவில்லை. ஆனால் வெற்றியாளருக்கு மகுடம் சூட்டப்பட்டது. அதுதான் இங்கு நடந்தது.