செய்திகள்

ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது சாம்பியன்ஸ் டிராபிக்கு உதவியாக இருக்கும்: கேன் வில்லியம்சன்

ஐ.பி.எல். தொடரில் தீவிரமாக விளையாடி வருவது இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு உதவிகரமாக இருக்கும் என்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், கோரி ஆண்டர்சன், ஆடம் மில்னே, மெக்கிளெனகன் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பிடித்துள்ளனர்.

கோரி ஆண்டர்சன், ஆடம் மில்னே, மெக்கிளெனகன் ஆகியோர் காயத்தால் நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்தனர். காயத்தில் இருந்து மீண்ட அவர்களுக்கு ஐ.பி.எல். தொடர் உடற்தகுதியை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

கேன் வில்லியம்சனும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐ.பி.எல். தொடர் ஜூன் 1-ந்தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘சாம்பியன்ஸ் டிராபி போன்ற மிகப்பெரிய தொடருக்கு முன் இதுபோன்ற தொடர்களில் விளையாடுவது மிகவும் சிறந்தாக இருக்கும் என்று நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் இந்த தொடர் எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. நியூசிலாந்து அணியில் உள்ள மற்ற வீரர்கள் சொந்த நாட்டில் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.