பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காஷ்மீரை கைப்பற்றுவதற்காக 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்திய ராணுவத்தின் முதல் படைப்பிரிவு 27-10-1947 அன்று காஷ்மீருக்கு நுழைந்தது.
அந்த நாளை குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 27-ம் தேதி ‘இன்பான்ட்டரி டே’ என்று நமது ராணுவ வீரர்களால் நினைவுகூர்ந்து கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில் அக்டோபர் 27-ம் தேதியான நேற்று 73-வது ‘இன்பான்ட்டரி டே’ கடைபிடிக்கப்பட்டது.
முப்படைகளை சேர்ந்த தளபதிகள் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் அதிகாரிகள் நாடெங்கிலும் உள்ள ராணுவ வீரர்கள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.