அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜூ, அருணாசல பிரதேசத்தில் உள்ள சிரோ பகுதியில் நடக்கும் அறுவடை திருவிழாவில் பங்கேற்க சென்றபோது, மோசமான வானிலை நிலவியதால் அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில், விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று காணாமல் போனது. 3 வீரர்களுடன் சென்ற இலகுரக ஹெலிகாப்டர், பாபம் பரே மாவட்டம் சாகலி அருகே சென்றபோது கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மாயமானது குறித்து மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.