செய்திகள்

தன் மீதான புகாருக்கு விரைவில் அறிக்கை அளிப்பேன்: அமைச்சர் சரோஜா

தன் மீதான லஞ்ச மற்றும் மிரட்டல் புகாருக்கு விரைவில் அறிக்கை அளிக்கப்படும் என்று சமூக நலத் துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

சென்னை:

தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் ராஜம்மீனாட்சி. இவர் தமிழக சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.

குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக பதவியில் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால் ரூ.30 லட்சம் தரவேண்டும் என்று அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் மிரட்டல் விடுத்தாக இன்று காலை சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார்.

இந்நிலையில், தன் மீதான லஞ்ச மற்றும் மிரட்டல் புகாருக்கு விரைவில் அறிக்கை அளிக்கப்படும் என்று அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். 

குற்றச்சாட்டு எழுந்துள்ளதை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சரோஜா ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்தார்.

அமைச்சர் சரோஜாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.