செய்திகள்

ரிக்கி பாண்டிங் கேப்டன் திறமையை விராட் கோலியிடம் பார்க்கிறேன்: மைக் ஹசி

கேப்டன் பதவியில் அணியை வழி நடத்திச் செல்வதில் ரிக்கி பாண்டிங் போன்று விராட் கோலி செயல்படுகிறார் என மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

கேப்டன் பதவியில் சவால்களை சந்தித்து விராட் கோலி வெற்றிகளை குவிப்பார் என்று ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக் ஹசி கூறுகையில் ‘‘கோலியின் கேப்டனை பதவியை நான் எப்போதும் ரசிப்பேன். அணி வெற்றி பெறுவதற்கான எல்லாவைற்றையும் பெற்றுள்ளார். ரிக்கி பாண்டிங்கின் கேப்டன் பணியை கோலியிடம் என்னால் பார்க்க முடியும்.

ரிக்கி பாண்டிங் அணி வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தீராத பசியில் இருப்பார். அந்த இலக்கை நோக்கி அணியை தள்ளிச் செல்வார். டோனி சிறந்த கேப்டன். அவரது சாதனைகளை எட்டுவதற்கு விராட் கோலி பெரிய சவாலாக இருக்கும்.