செய்திகள்

20 ஓவர் அணியில் இருந்து நீக்கம்: தேர்வுக்குழு முடிவுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் - ரகானே

20 ஓவர் போட்டிக்கான அணியில் இருந்து ரகானே நீக்கப்பட்டதை அடுத்து தேர்வுக்குழு எடுக்கும் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர் கூறினார்.

மாலை மலர்

மும்பை:

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 5 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதில் தொடக்க வீரர் ஷிகர் தவான் திடீரென்று விலகி னார்.

தனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் போட்டியில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவுடன் ரகானே தொடக்க வீரராக களம் இறங்கினார். அவர் 5 ஆட்டத்தில் 244 ரன் எடுத்தார். தொடர்ச்சியாக 4 அரைசதம் (55, 70, 53, 61) அடித்தார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ஒருநாள் போட்டி தொடரில் அசத்திய ரகானே நீக்கப்பட்டுள்ளார்.

எனக்கு கொடுத்த வாய்ப்பை (ஒருநாள் போட்டி) சரியாக பயன்படுத்தி கொண்டதில் மகிழ்ச்சி. தொடர்ச்சியாக 4 அரைசதம் அடித்தேன். நல்ல பார்மில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ரோகித் சர்மாவுடன் இதுவரை 3 முறை 100 ரன்னுக்கு மேல் பார்ட்னர் ஷிப் எடுத்துள்ளேன். எங்களது எண்ணம் எல்லாம் அணிக்கு நல்ல தொடக்கம் கொடுப்பதே ஆகும். வருங்காலத்தில் நடைபெறும் தொடரில் வாய்ப்பு கிடைத்தால் அரை சதத்தை சதமாக மாற்றுவேன்.

20 ஓவர் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்படுவது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடி வருகிறோம். அணி நிர்வாகம், தேர்வுக்குழு எடுக்கும் முடிவுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். அணிக்குள் போட்டி இருப்பது நல்ல வி‌ஷயம்தான். இது உங்களது திறமையை வெளிக்கொண்டுவர உதவும்.

யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அணிக்கு நன்மை கிடைக்கும் வகையில் விளையாட வேண்டும். நான் எப்போதுமே போட்டியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.