செய்திகள்

சசிகலாவை எனது சித்தி என்ற முறையில் தான் சந்தித்தேன்: தினகரன் பேட்டி

சசிகலாவை எனது சித்தி என்ற முறையில் தான் சந்திக்க சென்றேன், அரசியல் குறித்து பேசவில்லை என்று பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த பின் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

பெங்களூர்:

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இன்று சந்தித்தார். சிறையில் உள்ள சசிகலாவை அவர் சந்திப்பது 6-வது முறை ஆகும். 

இதனையடுத்து சசிகலாவை சந்தித்த பின் தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

இரு அணிகளையும் நிச்சயம் இணைக்க முடியும். இரு அணிகளையும் எவ்வாறு இணைப்பது என்பது குறித்து சசிகலா ஆலோசனை வழங்கி உள்ளார். ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு பிறகு நான் மீண்டும் கட்சி பணிகளை தொடங்குவேன். அணிகள் இணைப்புக்காக நான் 60 நாட்கள் விலகி இருக்கிறேன். 

ஏதோ சில பயத்தின் காரணமாக அமைச்சர் ஜெயக்குமார் எனக்கு எதிராக பேசி வருகிறார். அந்த பயம் தெளிந்து அவர் என்னுடன் பணியாற்றும் சூழல் வரும்.

எனக்கும், திவாகரனுக்கும் இடையே சமரசம் செய்ததாக நடராஜன் கூறுவது தவறு. நடராஜன் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் அல்ல. சித்தி என்ற முறையிலேயே சசிகலாவை சந்தித்தேன், அரசியல் பேசவில்லை

இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT