செய்திகள்

கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன்: சரத்குமார் பேட்டி

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தேன் என்று சரத்குமார் கூறினார்.

மாலை மலர்

வாணியம்பாடியில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுகூட்டம் நடந்தது. இதில் சரத்குமார் பேசியதாவது:-

இலவசங்களை கொடுத்து மக்களை கெடுத்துவிட்டார்கள். இதை விட இலவச கல்வி இலவச மருத்துவம் ஆகியவற்றை கொடுத்திருக்கலாம். தற்போது மத்திய அரசை பற்றி குறை சொன்னால் படம் நன்றாக ஓடும்.

ஒரு லட்சம் கோடியில் புல்லட் ரெயில் விடுவதை விட அனைத்து கிராம புறங்களிலும் மின் வசதி ஏற்படுத்தி கொடுக்கலாம்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தேன். தி.மு.க. உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக இல்லை. எம்.ஜி.ஆருக்கு பின் எனக்கு அரசியல் கற்று கொடுத்தவர் கருணாநிதி அதற்காக தான் நான் அவரை சந்தித்து நலம் விசாரித்தேன்.

விஸ்வரூபம் திரைபடம் குறித்து பிரச்சனைகள் வரும்போது கமல்ஹாசன் எதிர்த்து குரல் கொடுக்காமல் சிங்கம் குகையில் இல்லாத போது குரல் கொடுப்பது ஏன்?

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது நடத்தி வரும் வருமான வரித்துறை சோதனையை மத்திய அரசு முன் கூட்டியே நடத்திருக்க வேன்டும்.