குஜராத் மாநில சட்டசபைக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்; 84 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்; 61 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
இதேபோல், இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலிலும் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளதால் அங்கு பா.ஜ.க. ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் நம்பிக்கைக்காக குஜராத், இமாச்சலப் பிரதேசம் மக்களுக்கு தலை வணங்குகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி என்ற அரசியல் முறைக்கு பலத்த ஆதரவு கிடைத்துள்ளதைதான் குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. பாரதிய ஜனதா கட்சி மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் நம்பிக்கைக்காக குஜராத், இமாச்சலப்பிரதேசம் மக்களுக்கு தலை வணங்குகிறேன்.