கூர்காலாந்து தனி மாநில போராட்டக்காரர்களுடன் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளம் மாநிலத்திலிருந்து கூர்காலாந்து பகுதிகளை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கடந்த இரு மாதங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சி பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அவர் தெரிவித்ததாவது,” போராட்டக்காரர்களிடம் அப்பகுதியில் நடத்தி வரும் பந்த்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுள்ளேன். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜி போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என கூறினார்.