டெல்லியின் முன்னாள் முதல் மந்திரியும், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் நேற்று முன்தினம் இரவு காலமானார்.
அவரது உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்பு துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா சுவராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.
1977ம் ஆண்டு உங்களது இந்த மாரத்தான் ஓட்டம் ஆரம்பித்தது. அன்று முதல் 11 தேர்தலில் போட்டியிட்டுள்ளீர்கள். 4 முறை மக்களவை உறுப்பினர், 3 முறை மாநிலங்களவை உறுப்பினர். 25 வயதில் உங்கள் ஓட்டத்தை ஆரம்பித்தீர்கள்.
46 ஆண்டுகளாக இந்த ஓட்டம் நிற்கவில்லை. நானும் உங்களுடன் சேர்ந்து ஓடிவிட்டேன். நான் இன்னும் 19 வயதுடைய வாலிபர் இல்லை. எனவே, இப்படி ஒரு முடிவுனை எடுத்ததற்கு மிக்க நன்றி' என பதிவிட்டிருந்தார்.