செய்திகள்

விராட் கோலி எனது பந்து வீச்சை பாராட்டியதை கண்டு மயங்கிவிட்டேன்: மொகமது அமிர்

என்னுடைய பந்து வீச்சை புகழ்ந்து பாராட்டிய இந்திய அணியின் விராட் கோலியின் வார்த்தையால் நான் மயங்கி விட்டேன் என மொகமது அமிர் கூறியுள்ளார்.

மாலை மலர்

சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் முதன்முறையாக கோப்பையை வீழ்த்த காரணமாக இருந்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடக்கத்திலேயே ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் தவான் விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.

இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனாக உள்ள விராட் கோலி உலகில் உள்ள அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார். இந்நிலையில் தான் சந்தித்த தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் மொகமது அமிரும் ஒருவர் என விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘சமீப காலங்களில் பாகிஸ்தான் அணியின் சிறந்த பந்து வீச்சாளராக மொகமது அமிர் விளங்கி வருகிறார். உலகில் உள்ள தலைசிறந்த இரண்டு மூன்று பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சத்திக்க திணறிய பந்து வீச்சாளர்களில் மெகாமது அமிரும் ஒருவர். அவரை எதிர்கொள்ள வேண்டுமென்றால் பேட்ஸ்மேன் அவரது ‘ஏ’ கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். மிகச்சிறந்த பந்து வீச்சாளர்’’ என்றார்.

இந்நிலையில் விராட் கோலியின் புகழாரத்தால் நான் மயங்கிவிட்டேன் என்று மொகமது அமிர் கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து கூறுகையில் ‘‘விராட் கோலியை போன்ற ஜாம்பவான்கள் என்னைப் பற்றி புகழ்வது ஒரு சிறந்ததாக உள்ளது. என்னுடைய பந்து வீச்சை அவர் புகழ்ந்ததால் நான் மயங்கிவிட்டேன்.

கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டிக்கு முன்பு கோலி எனக்கு அன்பளிப்பாக அளித்த பேட், என்றும் எனது நினைவில் பசுமையாக இருக்கக்கூடியது.