செய்திகள்

காதலிக்க மறுத்த பெண் பொதுமக்கள் மத்தியில் எரித்து கொலை - வாலிபர் கைது

ஐதாராபாத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை பொதுமக்கள் மத்தியில் எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதாராபாத்தில் உள்ள அலுமினியம் நிறுவனத்தில் கார்த்திக் என்பவர் வேலைப்பார்த்து வருகிறார். அவர் அதே நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் சந்தியா ராணி என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் ராணி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இருப்பினும் கார்த்திக் அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை சந்தியா சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டார். அங்கிருந்த பொதுமக்கள் தீயை அணைத்து சந்தியாவை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

போலீசார் கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிக்க மறுத்த பெண் பொதுமக்கள் முன்னிலையில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT