செய்திகள்

சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 போட்டி

சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டி20 போட்டி நவம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #BCCI

அதன்பின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாடுகிறது. இதில் ஒரு போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த பகல் இரவு ஆட்டம் ஐதராபாத் அல்லது ராஜ்கோட்டில் நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் உடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்த போட்டிகள் மும்பை, கவுகாத்தி, கொச்சி, இந்தூர் மற்றும் புனேயில் நடக்கிறது.

பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி நவம்பர் 4-ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. அதன்பின் டி2-வது ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது. 3-வது ஆட்டம் கான்பூரில் நடக்கிறது. இதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT