ஹாக்கி உலக லீக் பைனல் தொடர் இன்று ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரில் தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி முதல் காலிறுதி நேரத்தில் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை.
2-வது காலிறுதி நேரத்தில் இந்தியா முதல் கோலை பதிவு செய்தது. அதற்கு ஆஸ்திரேலியா உடனடியாக பதில் கோல் அடித்தது.
அதன்பின் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் ஜெர்மனி 2-0 என இங்கிலாந்தை வீழ்த்தியது.