செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே குடிபோதையில் மனைவியை கொல்ல முயன்ற கணவன் கைது

ஆண்டிப்பட்டி அருகே குடிபோதையில் மனைவியை அடித்து கொல்ல முயன்ற கணவன் கைதானார்.

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் வேலுசாமி. கூலி தொழிலாளி. அவரது மனைவி நாகம்மாள். கடந்த சிலநாட்களாக வேலுசாமி குடிபோதையில் வந்து மனைவியை சித்ரவதை செய்து வந்தார்.

அதன்படி சம்பவத்தன்று வேலுசாமி குடிபோதையில் நாகம்மாளை அடித்து உதைத்து அரிவாள் மனையால் வெட்டி கொன்று விடுவதாக மிரட்டினார்.

அதிர்ச்சி அடைந்த நாகம்மாள் இதுகுறித்து ராஜதானி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுசாமியை கைது செய்தனர்.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வெள்ளையதேவன்பட்டியை சேர்ந்தவர் பால்சாமி. இவரிடம் பணம் கேட்டு இளைய மகன் படித்துரை தகராறு செய்து தாக்கினார். இதனை தடுக்க வந்த மூத்தமகன் கண்ணன் என்பவரையும் படித்துரை கத்தியால் குத்தினார். படுகாயம் அடைந்த கண்ணன் க.விலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து படித்துரையை தேடி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT