செய்திகள்

கணவரின் குடிப்பழக்கத்தால் தீக்குளித்து இளம்பெண் தற்கொலை

கணவரின் குடிப்பழக்கத்தால் வேதனை அடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் எடையூர் கிராமம் மேலபாண்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி.

இவர்களுக்கு 2½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. செந்தில்குமார் தினமும் வீட்டிற்கு குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்றும் செந்தில்குமார் குடித்துவிட்டு வந்ததை தமிழ்செல்வி கண்டித்ததால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த தமிழ்ச்செல்வி மண்எண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தாராம். உடன் தமிழ்ச்செல்வியை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.

இது குறித்த தகவலின் பேரில் எடையூர் இன்ஸ்பெக்டர் சிவதாஸ் மருத்துவமனையில் தமிழ்ச்செல்வியிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.