செய்திகள்

கல்பாக்கம் அருகே மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் கணவர் தற்கொலை

மனைவி கள்ளக்காதலனுடன் திடீரென ஓடியதால் மனவேதனை அடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாமல்லபுரம்

கல்பாக்கத்தை அடுத்த விட்டிலாபுரம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது23) கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவியும், 3 வயதில் மகனும் உள்ளனர்.

வெங்கடேசனின் மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதுபற்றி தெரிந்ததும். வெங்கடேசன், மனைவியை கண்டித்தார். எனினும் கள்ளக்காதல் ஜோடி எதையும் கண்டுகொள்ளாமல் சுற்றி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு வெஙக்டேசனின் மனைவி கள்ளக்காதலனுடன் திடீரென ஓட்டம் பிடித்தார். இதனால் வெங்கடேசன் மனவேதனை அடைந்தார்.

அவரது மனைவி ஓட்டம் பிடித்தது குறித்து உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் கேலி பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த வெங்கடேஷ் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT