செய்திகள்

அசோக் நகரில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

அசோக் நகரில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். காயமடைந்த அவரது மனைவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை:

தி.நகர், மாம்பழம் நெடுஞ்சாலை அம்மன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது48). இவரது மனைவி சித்ரா (39).

கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்ரா கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து தனது மகன், மகளுடன் அசோக் நகர், அம்பேத்கார் சாலை, பிருந்தாவனம் 1-வது குறுக்கு தெருவில் வசித்து வருகிறார்.

நேற்று இரவு ஜெயக்குமார் குடிபோதையில் மனைவி வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு முற்றியது.

இதில் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்ராவை குத்தினார். இதில் காயமடைந்த சித்ரா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சித்ரா அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.