ஆடு வளர்க்கிறவர்கள் உரிய நேரத்தில் அதற்கான தீவனத்தை போடாவிட்டால் பெரும் விலை கொடுக்க நேரிடலாம் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம், உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
அங்குள்ள கன்னோஜ் மாவட்டம், சிலுப்பூர் கிராமத்தில் சர்வேஷ் குமார் பால் என்பவர் ஒரு வெள்ளாடு வளர்த்து வருகிறார்.
சம்பவத்தன்று அந்த ஆட்டுக்கு அவர் தீவனம் போடவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் ரூ.66 ஆயிரம் மதிப்பிலான 33 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்து விட்டு குளிக்க சென்றிருந்தார்.
குளித்துவிட்டு அவர் திரும்பி வந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து போனார். அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஆடு மென்று தின்று கொண்டிருந்தது.