பேரையூர்:
திருமங்கலத்தை அடுத்த கூத்தியார்குண்டு கண்மாயில் முட்புதரில் தேங்கிய தண்ணீரில் இருந்து ஆணின் முழு வடிவ எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
அந்த வழியே சென்ற விவசாயிகள் மனித எலும்புக்கூடை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, எலும்புக் கூடாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தமிழகம் முழுவதுமுள்ள காவல் நிலையங்களில் மாயமானவர்கள் பற்றிய புகார்களை பற்றி ஆராய்ந்து வருகின்றனர். கூத்தியார்குண்டு கண்மாயில் எலும்புக் கூடாக கிடப்பவர் 2 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.