செய்திகள்

போலீஸ் நிலையத்தில் வாலிபர் மர்ம மரணம்- மனித உரிமை ஆணையம் வழக்கு

சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. #EsplanadePoliceStation

சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 20). மாற்றுத்திறனாளியான இவர் பிராட்வேயில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார்.

அந்த கடையின் மேல் தளத்தில் உள்ள வீட்டில் கடந்த 19-ந்தேதி 20 பவுன் நகைகள் திருட்டு போனது. இது தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமார், அவரது நண்பர்கள் விக்னேஷ், அஜித்குமார் ஆகியோரை கடந்த 20-ந்தேதி அதிகாலை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் போலீஸ் காவலில் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT