சென்னை:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அரசு பள்ளியில், எச்.ஐ.வி. பாதித்த மாணவரை பத்தாம் வகுப்பில் சேர்க்க பள்ளி தலைமை ஆசிரியர் மறுத்ததாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.
இந்த செய்தியை மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து(சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார்.
பின்னர் இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் 4 வாரத்துக்குள் தங்களது விளக்கத்தை அளிக்க உத்தரவிட்டார்.