செய்திகள்

மனிதன் உடல் 400 வருடத்திற்கு உயிர் வாழக்கூடியது: யோகா குரு ராம்தேவ்

மனிதன் உடல் 400 வருடத்திற்கு உயிர் வாழக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது என்றும், வாழ்க்கை முறையை நாம் மாற்றிக்கொண்டதன் விளைவாக வாழ்நாள் குறைவதாக யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.

மாலை மலர்

யோகா குரு ராம்தேவ் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மனிதனின் உடல் 400 வருடங்கள் வாழக்கூடியது என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து ராம்தேவ் கூறுகையில் ‘‘400 ஆண்டுகள் வாழக்கூடிய வகையில் மனித உடல் தகுதியானது. ஆனால், அந்த உடலை நாம் நவீன கால வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் தொந்தரவு செய்து வருகிறோம்.