சைக்கிள் பந்தயம் 
செய்திகள்

பெடல் பார் ஃபீஸ்... ஸ்ரீநகரில் காவல்துறை நடத்திய சைக்கிள் பந்தயத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற மக்கள்

ஜம்மு காஷ்மீரில் அமைதிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு துணைநிலை ஆளுநர் பரிசுகளை வழங்கினார்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் அமைதிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில், ஸ்ரீநகரில் இன்று சைக்கிள் பந்தயம் நடத்தப்பட்டது. போட்டியை துணைநிலை ஆளுநரின் ஆலோசகர் பசீர் கான், காவல்துறை தலைமை இயக்குனர் விஜய் குமார் ஆகியோர் கொடியைத்து துவக்கி வைத்தனர். 

வயது வாரியாக பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த சைக்கிள் பந்தயத்தில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். போட்டியின் நிறைவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வெற்றியாளர்களுக்கு பரிசுகளை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா வழங்கினார். 

இதுபற்றி டிஜிபி தில்பக் சிங் கூறுகையில், ‘இந்த சைக்கிள் பந்தயத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஒற்றுமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்ல பழக்கவழக்கங்களை இந்த செயல்பாடுகள் ஊக்குவிக்கின்றன. இதுபோன்ற செயல்பாடுகளில் இளைஞர்கள் பங்கேற்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், யாரும் வன்முறையை விரும்பவில்லை’ என்றார்.