சீன மின்சாதனம் மற்றும் தொலைதொடர்பு நிறுவனமான ஹூவாய் மேட்புக் டி நோட்புக் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகியுள்ள புதிய நோட்புக் டி (2018) 8-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் மற்றும் மேம்படுத்தப்பட்ட GPU கொண்டுள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மேட்புக் டி (2018) இம்முறை பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுள்ளது. முன்னதாக ஹுவாய் நிறுவனம் மேட்புக் X மற்றும் மேட்புக் இ உள்ளிட்ட சாதனங்களையும் அறிமுகம் செய்தது. ஹூவாய் புதிய மேட்புக் விண்டோஸ் 10 இயங்குதளம் சார்ந்து இயங்குகிறது.
ஹூவாய் மேட்புக் டி (2018) சிறப்பம்சங்கள்:
- 15.6 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே, 8-ம் தலைமுறை இன்டெல் கோர் i5, i7 பிராசஸர் மற்றும் பிரத்யேக Nvidia GeForce MX150 வழங்கப்பட்டுள்ளது. இதன் GPU முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதிய ஹூவாய் நோட்புக் மூன்று மாடல்கள் - விலை குறைந்த மாடல் இன்டெல் கோர் i5-8250U பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்.எஸ்.டி., Nvidia GeForce MX150 GPU கொண்ட மாடல் CNY 5,188 அதாவது இந்திய மதிப்பில் ரூ.50,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது மாடல் இன்டெல் கோர் i5-8250U சிப்செட், 8 ஜிபி ரேம், 128 ஜிபி எஸ்.எஸ்.டி. + 1000 ஜிபி எச்.டி.டி. மற்றும் அதே GPU கொண்ட மாடல் CNY 5,488 அதாவது இந்திய மதிப்பில் ரூ.53,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் பிரீமியம் மாடல் மேட்புக் 2018 இன்டெல் கோர் i7-8550U பிராசஸர், 8 ஜிபி மெமரி, 128 ஜிபி எஸ்.எஸ்.டி. + 1000 ஜிபி எச்.டி.டி, Nvidia GeForce MX150 கிராஃபிக்ஸ் கார்டு கொண்ட மாடல் CNY 6,688 அதாவது இந்திய மதிப்பில் ரூ.65,700 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.