கிரேன் விபத்து 
செய்திகள்

ஆந்திராவில் கிரேன் சரிந்து பலியானோர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்

ஆந்திராவில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஹிந்துஸ்தான் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமராவதி:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஒன்றாம் தேதி சரக்கு பெட்டகங்களை கையாளும் 60 அடி உயரமுள்ள ராட்சத கிரேன் விழுந்ததில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்ற தொழிலாளி ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திராவில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் துறைமுகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அந்நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ஆந்திராவில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.