செய்திகள்

தமிழக தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க மறுக்கிறார் என்பது பொய்- எச்.ராஜா பேட்டி

காவிரி விவகாரத்தில் தமிழக தலைவர்களை மோடி சந்திக்க மறுக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருவது பொய் என்று எச். ராஜா கூறியுள்ளார். #hraja #pmmodi #cauveryissue

மாலை மலர்

திருவாரூர்:

பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா திருவாரூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி பிரச்சினையில் தி.மு.க. துரோகம் செய்துள்ளது. மத்திய அரசு , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்.

காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி தயாராக இருக் கிறார். ஆனால் தமிழக தலைவர்களை மோடி சந்திக்க மறுக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருவது பொய்.

திருவாரூரில் ஆழித்தேரோட்டம் வருடந்தோறும் ஆயில்ய நட்சத்திரத்தில் தான் நடைபெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #hraja #pmmodi #cauveryissue