செய்திகள்

விவசாயிகளுக்காக ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: எச்.ராஜா பேட்டி

விவசாயிகளுக்காக ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார். அவருடைய போராட்டம் உள்நோக்கம் உடையது என்று எச். ராஜா கூறினார்.

மாலை மலர்

தூத்துக்குடி:

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுப்போய் உள்ளது. கொடநாடு எஸ்டேட்டில் தொழிலாளி கொலையே இதற்கு உதாரணம். எங்கும் பாதுகாப்பு இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு பா.ஜனதா காரணம் என சிலர் கூறுகிறார்கள்.

அவ்வாறு சொல்பவர்கள் தான் இந்த பிரச்சினைகளுக்கு காரணம். விவசாயிகளுக்காக ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார். அவருடைய போராட்டம் உள்நோக்கம் உடையது. விவசாயிகள் போராட்டம் அய்யாக்கண்ணுவுக்காக நடந்தது போல தெரிகிறது. டெல்லியில் அய்யாக்கண்ணு போராட்டத்தின்போது தீவிரவாதி அப்சல்குருவின் கூட்டாளி ஷேக் உதுமான் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இதன்மூலம் அய்யாக்கண்ணுவுக்கு தீவிரவாதியுடன் தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. எனவே தமிழக அரசு அய்யாக்கண்ணுவை கைது செய்யவேண்டும். இது தொடர்பாக தமிழக முதல் அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளேன். தமிழகம் வரும் மத்திய மந்திரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதுபற்றி தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கான பாதுகாப்பை மத்திய அரசு பார்த்துக்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.