போளூர்:
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து போளூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போளூர் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சி.பருவதராஜ் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் எம்.முனியப்பன், மாநில துணை செயலாளர் தாமஸ்தோமினிக், மாவட்ட பொருளாளர் அ.அசுரவடிவேல், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ச.சங்கர், துணை அமைப்பாளர்கள் ப.ராஜா, ச.சத்யா, ந.நாகராஜ், சோமன்ஏழுமலை, மற்றும் பலர் கலந்து கொண்டு எச்.ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். #tamilnews