மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 
செய்திகள்

திண்டுக்கல்லில் வீட்டுமனை பட்டா கேட்டு கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு திண்டுக்கல்லில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாலை மலர்

திண்டுக்கல்:

திண்டுக்கல் நகரில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் நீண்ட நாட்களாக குடியிருக்கும் வீடுகளுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும், நீர்நிலை புறம்போக்கில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், கோவில், மடம், அறக்கட்டளை, வக்போர்டுக்கு சொந்தமான நிலங்களில் நீண்ட நாட்களாக வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் கிரையம் செய்து வழங்க வேண்டும், தகுதி உள்ள அனைவருக்கும் முதியோர், விதவை உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாவட்டக்குழு கருப்பசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். செல்வநாயகம், நாகநந்தினி, ஜீவாநந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் அஜய்கோஸ், நகர செயலாளர் ஆசாத், செல்வகணேசன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.