லாலாபேட்டை:
மாயனுரை அடுத்த கோரகுத்தி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் நேற்று காலை வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவியும் அதிகாலையிலே வெளியில் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டின் முன் பக்க வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் வீட்டு பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் தங்க நகைககள் மற்றும் வெள்ளி கொளுசுகளை எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது ராஜேந்திரன் திடீர்ரென வீட்டிற்க்கு வந்துள்ளார். இதைப் பார்த்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே ராஜேந்திரன் திருடன் திருடன் என சத்தம் போட்டபடி தூரத்தி சென்றார். கிராம மக்களும் மர்ம நபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்து மாயனூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து மாயனூர் போலீசார் வழக்குபதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.