செய்திகள்

துறைமுகம் தொகுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கப்படும்: சேகர்பாபு கேள்விக்கு அமைச்சர் பதில்

துறைமுகம் தொகுதியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கப்படும் என்று சட்டசபையில் சேகர்பாபு கேள்விக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.

மாலை மலர்

சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது துறைமுகம் தொகுதி பல்லவன் நகரில் வசிப்பவர்களுக்கு வீடுகள் கட்டப்படுமா? என்று பி.கே.சேகர் பாபு (தி.மு.க.) கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

இந்த பகுதியில் 753 குடும்பங்கள் வாழ்கிறது. கூவம் நதி மேம்பாடு திட்டத்துக்கு நிலம் தேவைப்படுவதால் அங்கு வீடுகள் அமைக்க இயலாது. இதனால் பெரும்பாக்கம் எழில் நகரில் 726 பேருக்கு வீடு ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அங்கு செல்லவில்லை.

பி.கே.சேகர்பாபு:- ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு இங்குள்ள மக்கள் செல்லாதது உண்மைதான். காரணம் இங்கு தொழில் பார்க்கிறார்கள். குழந்தைகள் படிக்கிறது. எனவே வால்டாக்ஸ் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு அவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கலாம்.

இது குறித்து பரிசீலிக்கப்படும்.

பி.கே.சேகர்பாபு:- துறைமுகம் பகுதியில் சாலையோரம் 2000 குடும்பங்கள் உள்ளன. பெரும்பாக்கத்தில் 4000-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி வைத்திருப்பதாக அமைச்சர் கூறி இருந்தார்.

அதில் 2000 பேருக்கு வீடுகள் ஒதுக்கினால் அவர்கள் அங்கு குடியேறுவார்கள்.

சாலையோரம் வசிப்பவர்கள் 300 பேர் தான் உள்ளதாக எங்களுக்கு தெரிகிறது. ஆனால் எம்.எல்.ஏ 2000 பேர் என்கிறார். அந்த பட்டியலை தந்தால் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.