செய்திகள்

மதுரையில் வாடிக்கையாளர்களை தாக்கிய ஓட்டல் அதிபர்- 2 பேர் கைது

மதுரையில் வாடிக்கையாளர்களை தாக்கியதாக ஓட்டல் அதிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை:

மதுரை சிந்தாமணி விநாயகர் தெருவைச் சேர்ந்த பெத்துரமேஷ் (வயது25), தனது நண்பர் மேலஅனுப்பானடி பாஸ்கர் (33) என்பவருடன் வடக்கு வெளிவீதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.

அப்போது அவர்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கைகலப்பு ஏற்பட்டது.

ஓட்டல் அதிபர் அக்பர் (37), மாஸ்டர்கள் முனீசுவரன் (33), நெல்பேட்டை ஜாபர் உசேன் (33) மற்றும் 5 பேர் சேர்ந்து உருட்டுக் கட்டையால் தாக்கியதாக விளக்குத்தூண் போலீசில் பெத்துரமேஷ் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அக்பர், முனீசுவரன், ஜாபர் உசேன் ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT