செய்திகள்

எனது இரட்டை பதவி நீண்ட நாள் நீடிக்காது: அருண் ஜெட்லி

தனக்கு வழங்கப்பட்டுள்ள இரட்டை பதவி நீண்ட நாள் நீடிக்காது என நம்புவதாக மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

மத்திய மந்திரி அருண் ஜெட்லி நிதி மற்றும் ராணுவம் ஆகிய துறைகளை கவனித்து வருகிறார். இதற்கிடையே, மந்திரி சபை விரிவாக்கம் விரைவில் நடைபெற உள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இந்நிலையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி அருண் ஜெட்லி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் மந்திரி சபை விரிவாக்கம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அருண் ஜெட்லி பதில் கூறுகையில், ‘எனக்கு வழங்கப்பட்டுள்ள இரட்டை பதவி நீண்ட நாள் நீடிக்காது என நம்புகிறேன். மந்திரி சபையில் மாற்றம் ஏற்பட்டால், கூடுதல் பதவி வகிக்கும் மந்திரிகளின் வேலைச் சுமை குறையும்’ என தெரிவித்துள்ளார்.