செய்திகள்

மீண்டும் விற்பனைக்கு வருகிறது ஹானர் 9 லைட் - வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை

ஹூவாய் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் வருகிற 13-ம் தேதி பிளாப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Honor9Lite #FlipkartSale

புதுடெல்லி:

ஹூவாய் ஹானர் பிரான்டு இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிரே நிறத்தில் கிடைக்கும் புதிய ஹானர் 9 லடை் ஸ்மார்ட்போனின் விற்பனை பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் வருகிற 13-ம் தேதி பிளாப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது 

மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் பிளாக் நிறங்களிலும் ஹானர் 9 லைட் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஹானர் 9 லடை் ஸ்மார்ட்போன் விலை ரூ.10,999 (3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல்) முதல் துவங்குகிறது. ஹானர் 9 லடை் 4 ஜிபி ரேம், 64 ஜிபி  கொண்ட மாடல் ரூ.14,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஹூவாய் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனினை பிளிப்கார்ட் தளத்தில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாரத ஸ்டேட் வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதோடு வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக 199 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஆறு மாதத்திற்கு 295 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. #Honor9Lite #FlipkartSale #VodafoneOffer #tamilnews