செய்திகள்

இப்படியும் வேலை தேடலாம் - வீடில்லாதவரை தேடி வந்த நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புகள்

அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு பகுதியில் தங்குவதற்கு வீடு இல்லாத இணையதள வடிவமைப்பாளர் ஒருவரின் புதுமுயற்சியால் அவருக்கு தற்போது வேலை வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன. #SiliconValley #DavidCasarez

அமெரிக்காவில் உள்ள வளைகுடா பகுதி சிலிகான் பள்ளத்தாக்கு. இங்கு டேவிட் கசாரேஸ் என்ற இணையதள வடிவமைப்பாளர் வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு இங்கு சரியான வேலை கிடைக்காததால் தங்குவதற்கு இடம் இன்றி தனது காரிலேயே தங்கி வேலைவாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.

எங்கும் தேடியும் வேலை கிடைக்காத டேவிட், புதுமுயற்சியாக, சாலை சிக்னல்களில் தனது பயோடேட்டாவை பொறுத்திவிட்டு, அதில் ஒரு வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார். ‘வீடில்லாத நான் வெற்றிக்காக பசித்து இருக்கிறேன், எனது சுயவிவரங்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்பதே அந்த வாசகம்.

SCROLL FOR NEXT