மழை 
செய்திகள்

தொடர் மழை: வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழை காரணமாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

மாலை மலர்

திருவண்ணாமலை:

இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் மழை பெய்து வருகிறது.  

தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.